adding this sweet ingredient to curd in summers can reduce the risk of heart attacks

Share

வெயில் காலத்தில் தயிர் மற்றும் தயிர் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்வது மிக முக்கியமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தயிர் நம் உடலுக்கு குளுமை தரக் கூடியது என்பதும், பல்வேறு விதமான சத்துக்களை கொண்டது என்பதும் அதற்கு காரணம் ஆகும். அதே சமயம், தயிருடன் இனிப்பான ஒன்றை சேர்த்து எடுத்துக் கொள்வதன் மூலமாக நம் இதய நலன் மேம்படும் என்பதும், ஹார்ட் அட்டாக் பிரச்சனையை தவிர்க்க அது உதவிகரமாக இருக்கும் என்பதும் நாம் அறியாத விஷயமாக உள்ளது.

இயற்கையாகவே இதய நலனை மேம்படுத்த உதவும் இந்த கலவையான உணவுப் பொருள் குறித்து நாம் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, கோடை காலத்தில் இதன் தேவை இன்றியமையாத ஒன்றாகும்.

சேர்க்க வேண்டிய இனிப்பு என்ன?

கோடை காலத்தில் தயிர் சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமானது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தயிரை போதுமான அளவு எடுத்துக் கொண்டால் உடலின் வெப்ப அளவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். உடலுக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்கவும் தயிர் வழிவகை செய்கிறது. அதனால், தான் அனைத்து தரப்பு மக்களுகும் தயிர் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர்.

பால் சார்ந்த உற்பத்தி பொருட்களில் வேறெந்த உணவுப் பொருளுக்கும் இல்லாத சிறப்பம்சம் தயிருக்கு இருக்கிறது. அதாவது தயிரை நீங்கள் குளிர்பானமாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தயிருடன் சர்க்கரை, உப்பு, மிளகுத் தூள், சீரகத் தூள் அல்லது சில காய்கறிகளையும் கூட சேர்த்து சாலட் போல எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பிரச்சனை இருப்பவர்கள் பிரியாணி இலையை உணவில் சேர்த்துக்கொள்ளவே கூடாதாம்..!

பல ஆண்டுகளாக நமது முன்னோர் கடைப்பிடித்து வரும் உணவுப் பழக்க வழக்கம் இது. நமது இதய நலனை இயற்கையாகவே மேம்படுத்துவதற்கு இந்த உணவு முறை உதவியாக இருக்கிறது. குறிப்பாக, தயிருடன் நீங்கள் தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் பெருமளவில் குறைந்து விடும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தயிரும், தேனும்..

தயிரில் இயற்கையாகவே நல்ல கொழுப்புகள், புரதம் மற்றும் கால்சியம் போன்று சத்துக்கள் இருக்கின்றன. நம் உடலில் விட்டமின் டி சத்து உற்பத்தியாக அது உந்து சக்தியாக அமைகிறது. இதனால், நமது ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தயிரையும், தேனையும் நாம் கலந்து சாப்பிட்டால் உடல் எடை சீரான அளவில் இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், ரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள கொழுப்பு படிவங்களை அது நீக்கி விடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்று கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. செல் பாதிப்புகளை தடுக்கிறது. எனினும், இந்த தயிர் – தேன் கலவை உணவை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com