இயக்குனர் மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு-2 என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் படம் ஆகஸ்ட் 31 தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது தணிக்கையில் A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
விஜயகாந்த் படங்களில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் காதல் பாடல்கள்…
இதன் காரணமாக படத்தில் சில காட்சிகள் நீக்கிவிட்டு யு/ஏ சான்றிதழ் பெரும் முயற்சியில் படக்குழு உள்ளது. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிச் சொல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளிலும் தயாரிப்பு நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
Yet another Mesmerising Musical Treat from @DirectorMysskin #Pisasu2 #NenjaiKelu 2nd Single https://t.co/F7c27kU0rZ#KarthikRaja@PriyankaNKOffl#Kabilan@Rockfortent @VijaySethuOffl @Lv_Sri @actor_ajmal @shamna_kkasim @Actorsanthosh @kbsriram16 @APVMaran @saregamasouth
— Andrea Jeremiah (@andrea_jeremiah) August 25, 2022
அதில் ஏற்கனவே கார்த்திக் ராஜா இசையில் உருவான முதல் பாடலை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது நெஞ்சை கேளு என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர்.
அந்த பாடலை ப்ரமோஷன் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளனர். அதில் ஆண்ட்ரியா மற்றும் சூப்பர் சிங்கர் பிரியங்கா ஆகியோர் நடித்துள்ளனர். பிசாசு 2 திரைப்படம் திகில் கதையின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.