என்னுடைய பெற்றோர் இங்கே வந்திருக்கின்றனர். நான் மட்டுமில்லை ஒட்டுமொத்த அணியுமே என்னுடைய பெற்றோருக்காக ஆவலாக காத்திருந்தனர். எங்கள் அணிக்கு அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நாங்கள் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்றிருந்தோம். அந்த தோல்வியிலிருந்து அணியை மீட்க வேண்டும் என நினைத்தேன்.
போட்டிக்கு முன்பாகத்தான் அந்தத் துண்டுச் சீட்டை எழுதினேன். தினசரி காலையில் எழுந்தவுடன் எதையாவது எழுதுவேன். இன்றைக்கு நான் எதை செய்தாலும் அது ஆரஞ்சு ஆர்மிக்காகதான் என தோன்றியது. அதனால்தான் அப்படி எழுதினேன்.
இந்த நேரத்தில் யுவராஜ் சிங்குக்கும் சூர்யகுமார் யாதவ்க்கும் நன்றி கூற விரும்புகிறேன். கடந்த 4 நாள்களாக காய்ச்சலால் உடல் நிலை சரியில்லாமல் ரொம்பவே அவதிப்பட்டேன். ஆனால், யுவராஜ் சிங், சூர்யகுமார் போன்றோர் எனக்கு கிடைக்கப்பெற்றதில் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே இருந்தார்கள். என்னால் இப்படி ஒரு இன்னிங்ஸை ஆட முடியுமென அவர்கள் நம்பினார்கள்.’ என்றார்.
யுவராஜ் சிங் அபிஷேக் சர்மாவுக்கு நிறைய பயிற்சிகளை அளித்திருக்கிறார். சூர்யகுமார் யாதவ் தற்போதைய இந்திய டி20 அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.