அல்லு அர்ஜுன் – அட்லீ இணையும் திரைப்படத்தில் நாயகியாக இணைந்துள்ளார் பாலிவுட் முன்னணி நாயகி தீபிகா படுகோன்.
புஷ்பா படங்களைத் தொடர்ந்து மிகப் பெரிய மார்க்கெட்டை உருவாக்கியிருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன்.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், இந்தியில் ஜவான் எனப் பெரிய நட்சத்திரங்களுடன் பிரமாண்டமான படைப்புகளை வழங்கி வருகிறார் இயக்குநர் அட்லி. அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் இருவரும் இணைவது உறுதியானது.
மிகப் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்படும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
AA22XA6 என அழைக்கப்படும் இந்தப் படம் பீரியட் கதையின் அடிப்படையில் உருவாவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
AA22XA6 -க்காக தீபிகா படுகோனிடம் அட்லீ கதை சொல்வது, லுட் டெஸ்ட் மற்றும் சண்டைப் பயிற்சி வீடியோக்களை இணைத்து அவரது இணைவை அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
The Queen marches to conquer!❤
Welcome onboard @deepikapadukone✨#TheFacesOfAA22xA6▶️ https://t.co/LefIldi0M5#AA22xA6 – A Magnum Opus from Sun Pictures@alluarjun @Atlee_dir#SunPictures #AA22 #A6 pic.twitter.com/85l7K31J8z
— Sun Pictures (@sunpictures) June 7, 2025
`கட்சி சேர’, `ஆசைகூட’ போன்ற சுயாதீனப் பாடல்களின் மூலம் மக்களிடம் வரவேற்பைப் பெற்ற சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
அவென்சர்ஸ் – என்ட் கேம், கேப்டன் மார்வெல் போன்ற திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட `Lola VFX’ நிறுவனத்தில் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்கிறது.

அட்லீயுடன் மீண்டும் இணையும் Deepika Padukone!
அட்லீயின் ஜவான் படத்தில் ஸ்பெஷல் கேமியோ பாத்திரத்தில் நடித்திருந்தார் தீபிகா படுகோன். அல்லு அர்ஜுனுடன் முதன்முறையாக இணைகிறார்.
கோலிவுட் இயக்குநர் – டோலிவுட் நடிகர் – பாலிவுட் நடிகை என பான் இந்தியா கலைஞர்கள் படமாக உருவாகிறது AA22XA6.
தீபிகா இந்தப் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தீப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட் படத்திலிருந்து தீபிகா விலகியது சர்ச்சையானதை அடுத்து, இந்தப் படத்தின் அறிவிப்பு அவரது ரசிகர்கள் கொண்டாடும் ஒன்றாக மாறியிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…