a police fulfilled 100 years old grandmother wish image trending on social media | 100 வயது பாட்டியின் வினோதமான ஆசை நிறைவேறியது

Share

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கலவரக்காரர்கள், கொலையாளிகள், உள்ளிட்டவர்களை நீண்ட நாள் தேடி, வலை வீசிப் பிடிப்பது போலீசாருக்கு மிகுந்த உற்சாகத்தை தரும். சமீபத்தில் வழக்கம் போல ஒரு கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், இந்த மாதிரியான கைது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

போலீசார் கைது செய்தது 100 வயது மூதாட்டி என்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம். 100 வயது பாட்டியை கைது செய்வதால் இவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? அந்த பாட்டி அவ்வளவு கிரிமினல் வேலையில் ஈடுபட்டவரா என்று அடுக்கடுக்கான கேள்விகள் தோன்றலாம். இதில், அந்த பாட்டியின் ஆசையை நிறைவேற்றியதாக போலீசார் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நடந்தது என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்

எல்லாருக்குமே இதையெல்லாம் செய்ய வேண்டும், இந்த இடங்களுக்கு போகவேண்டும் என்று பல வித ஆசைகள் இருக்கும். ஒரு சிலர் நான் இறப்பதற்குள் இந்த விஷயங்களை செய்தே தீர வேண்டும் என்று பக்கெட் லிஸ்ட் ஒன்றை வைத்திருப்பார்கள். அது போலத்தான் 100 வயது பாட்டிக்கும் ஒரு வினோதமான ஆசை இருந்தது. அதாவது தான் ஒரே ஒரு முறையாவது போலீஸாரால் கைது செய்யப்பட வேண்டும் என்பது தான் அந்த 100 வயது பாட்டியின் ஆசை.

100 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய போலீசார் தான் அவரது கதையை மகிழ்ச்சியாகவும் நெகிழ்வாகவும் பேஸ்புக்கில் பகிர்ந்து உள்ளனர். இந்த பாட்டியின் பெயர் ஜேன் பிகெடான். இவர் நர்ஸாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையத்தில் வசித்து வரும் ஜேன், சமீபத்தில் தான் தனது 100 ஆவது நாளை கொண்டாடியுள்ளார்.

Read More : அதிசய காட்சி..கண்களில் இருந்து பாயும் ஒளி… இணையத்தை கலக்கும் ‘லேசர் கேட்’ வீடியோ!

நூறு வயது வரை தற்போது ஆரோக்கியமாக இருப்பது கேள்விக்குறியாக இருக்கும் போது, 100 வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டியின் ஆசை நிறைவேற வேண்டுமல்லவா! ஜேனின் ஆசை, அவர் ஒரு முறையாவது கைதாக வேண்டும். அது தான் தன்னுடைய பக்கெட் லிஸ்டில் இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த விஷயத்தை பற்றி கேள்விப்பட்ட போலீசார் 100 வயதான பாட்டியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். விக்டோரியாவில் இருக்கும் Moe காவல் நிலையத்தில் அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து வந்தனர். 100 வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஜேன் ஈடுபட்டிருந்த பொழுது மூன்று இளம் மூன்று கான்ஸ்டபிள்கள் அவர் தங்கியிருந்த இடத்திற்கு வந்து அவருடைய நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினர். அதாவது அவரை கைது செய்யப்போவதாக தெரிவித்தனர்.

நூறாவது பிறந்தநாள் கொண்டாடும் ஒரு பாட்டியை போலீசார் கைது செய்கிறார்கள் என்பது அங்கிருக்கும் பலருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் யாருக்கும் பதற்றப்படாதவாறு யாரும் பிரச்சனையில் இல்லை என்பதை புரிய வைத்த போலீசார், ஜேன் கைது செய்யப்படுகிறார் என்பதை கூறினார்கள். அது மட்டுமல்லாமல் ‘உங்களை கைது செய்கிறோம்’ என்று கூறி அவருடைய கைகளில் கை விலங்கையும் மாட்டினார்கள். அதற்கு ஜேன் எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை.

ஜேனைப் பொறுத்தவரை அவருடைய பல ஆண்டுகால ஆசை பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நிறைவேறியது; அது மிகச்சிறப்பான ஒரு கொண்டாட்டமாகத்தான் இருந்தது என்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஜேனின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அதை மறக்க முடியாத தருணமாக மாற்றியது எங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவுகூறும் ஒரு நிகழ்வாக இருக்கும் என்று போலீசாரும் மகிழ்ச்சியாக தெரிவித்தனர். இதை நிறைவேற்றுவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியும் கூறி இருந்தனர்.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com