இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 1-ஆம் தேதி தமிழ்நாடு குத்துச்சண்டைக் கழகத்தால் தஞ்சாவூரில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான ஆண்டுப்போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர்.
இதைத்தொடர்ந்து, மே 6, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் புதுக்கோட்டையில் தமிழ்நாடு குத்துச்சண்டைக் கழகம் நடத்திய மாநில அளவிலான ஆண்டுப் போட்டியில் இந்த பள்ளியின் மாணவி தனலெட்சுமி, 54 முதல் 57 கிலோ எடைப்பிரிவினருக்கான போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கமும், மாணவி வெண்ணிலா, 36 முதல் 38 எடைப்பிரிவினருக்கான போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
Also Read : 2023 ஹாக்கி உலகக்கோப்பை: ஒடிசாவில் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியம்
இப்போட்டியின் முடிவில், பதக்கம் வென்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி ஆகியோரை மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளார். மாநில அளவிலான போட்டியில் பதக்கம் வென்றதன்மூலம் பிற நரிக்குறவ மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் மாணவிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.