Doctor Vikatan: வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களுக்கும் சன் ஸ்கிரீன் அவசியமா?| doctor vikatan – Is sunscreen necessary for those who work from home

Share

Doctor Vikatan: நான் கடந்த 2 வருடங்களாக வொர்க் ஃப்ரம் ஹோமில்தான் இருக்கிறேன். வீட்டைவிட்டு வெளியே போவதில்லை. ஆனாலும், என் சருமம் கருத்துப்போவதை உணர்கிறேன். வீட்டிலிருக்கும்போதும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டுமா? சரியான சன் ஸ்கிரீனை தேர்வு செய்வது எப்படி?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

சன் ஸ்கிரீன் வாங்கும்போது அதில் எஸ்.பி.எஃப் (சன் புரொடக் ஷன் ஃபேக்டர்) அளவைப் பார்த்து வாங்க வேண்டியது முக்கியம். சூரிய ஒளியில் அல்ட்ரா வயலட் ஏ, அல்ட்ரா வயலட் பி கதிர்கள், இன்ஃப்ரா ரெட் கதிர்கள் போன்றவை இருக்கும். அவை நம் சருமத்தில் படும்போது சருமம் பாதிப்புக்குள்ளாகும்.

இவற்றில் அல்ட்ரா வயலட் பி கதிர்களால் நம் சருமத்தில் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் வருகின்றன. சருமப் புற்றுநோய்க்கும் இவைதான் காரணம். ஆனால், இந்தியர்களைப் பொறுத்தவரை சருமப் புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால் அது குறித்து பயப்பட வேண்டாம். ஆனாலும், நம் சருமத்தின்மீது வெயில் பட்டதும் சீக்கிரம் கருத்துப்போகவும் மங்கு எனப்படும் பிக்மென்ட்டேஷன் பாதிப்புக்கு உள்ளாகவும் இதனால் வாய்ப்புகள் அதிகம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com