உக்ரைனுடனான போருக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு. 48 ரஷ்ய நகரங்களில் போராடியவர்கள் மீது தடியடி

Share

உக்ரைனுடன் உடனான போருக்கு ரஷ்யாவுக்கு உள்ளேயே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் நாட்டு அரசு போர் தொடுப்பதை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ பலம் குறைந்த உக்ரைன் இந்த எதிர்ப்பை சமாளித்து, ரஷ்ய படைகள் முன்னேறுவதை தடுத்து நிறுத்த தொடங்கியுள்ளது. இதற்கிடையே இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பெலாரஸ் அரசு முயற்சி மேற்கொண்டது.

இதன் விளைவாக ரஷ்யாவும், உக்ரைனும் பெலாரசில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னர், தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க – ரஷ்யாவுடனான போர்: உக்ரைன் ராணுவ வீரர்களின் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய அதிபர் ஜெலன்ஸ்கி

இதற்கிடையே, ரஷ்யாவின் ஆதிக்கப் போக்கிற்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் தலைநகர் மாஸ்கோவில் போராட்டம் நடத்தினர். சுமார் 48 நகரங்களில் இந்த போராட்டம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க – பொருளாதாரத் தடை விதித்த ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடவடிக்கை

போராட்டம் நடத்தியவர்கள் போர் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் தாங்கியிருந்தனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவுக்கு உள்ளேயே போராட்டம் நடத்திய சுமார் 5,500 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ரஷ்யாவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், 27 நாடுகள் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளன. தொடர்ந்து அந்நாட்டின் மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதிக்கத் தொடங்கியுள்ளன.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com