முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: திமுக எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

Share

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொலி காட்சி மூலமாக நேற்று நடந்த பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் எம்பி, எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாக முகவர்களை காணொலி காட்சி மூலம் அவர்கள் செய்யும் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, சென்னை வடக்கு மாவட்டம், ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுகவினர் கலந்துகொண்ட நிகழ்ச்சி அறிவகம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக பாக முகவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றனர். பாக முகவர்களுக்கான பணிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். மேலும், அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளையஅருணா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், வ.பெ.சுரேஷ், நிர்வாகிகள், பாக முகவர்கள், மாநில, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com