கேஜிஎப் ப்ளான்.. மாஸ் ஓபனிங்.. தமிழகத்தில் ஸ்கெட்ச் போட்ட காந்தாரா டீம்!

Share

கன்னடத்தில் வெளியாகி வெற்றியடைந்திருக்கும் காந்தாரா திரைப்படத்தை தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி வெளியிடுகின்றனர். இந்நிலையில் கேஜிஎப் மாதிரியான வெற்றியைக் கொடுக்க ட்ரீம் வாரியர்ஸ் பக்கா ப்ளான் செய்துள்ளனர்

கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2, மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், காந்தாரா என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியானது.

ரிஷப் ஷெட்டி என்பவர் இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி வெளியானது.  கன்னடத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கர்நாடகவை தாண்டி, தமிழகம் மற்றும் ஆந்திர போன்ற இடங்களிலும் அந்தப் படம் குறித்து அதிகம் பேசப்பட்டது.

இந்த நிலையில் கந்தாரா திரைப்படத்தை தமிழ்,  தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். இது கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதால் தமிழகத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு  வெளியிடுகிறார். இங்கே சுமார் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அந்த திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கான தமிழ் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

கர்நாடகாவில் பொன்னியின் செல்வன் படத்திற்கு  முக்கியத்துவத்தை குறைத்து, காந்தாரா திரைப்படத்தை திரையிட வேண்டும் என அங்கு இருந்த திரையுலகத்தினர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்.  இதனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு சற்று பாதிப்பு ஏற்பட்டது.

Read More: தீபாவளி ரேஸில் ‘சர்தார்’.. ‘பிரின்ஸ்’! அதிகாலை ஷோவுக்கு ப்ளான்! அரசுக்கு பறந்த கோரிக்கை

இந்த நிலையில் கன்னடத்தில் உருவான காந்தாரா திரைப்படத்தை தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.  தமிழகத்தில் பொன்னியின் செல்வன் மிகுந்த வரவேற்புடன் திரையிடப்பட்டு வந்த நிலையில், தற்போது காந்தாரா திரைப்படத்திற்கு கணிசமான திரையரங்குகளை ஒதுக்கியுள்ளனர் என கூறப்படுகிறது.

இப்படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இயற்கைக்கும், மனிதனுக்குமான முரண்களை குறித்து இந்தப் படத்தை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். நாட்டாற்றியல் கண்டாராவில் இன்னும் வலுவாக வேரூன்றியுள்ளது. படத்துக்கு அதுதான் தீவிரத்தன்மையை தந்துள்ளது

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com