இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் சர்ச்சை – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் பதில் என்ன? | Central Minister Anurag Thakur addresses the India-Pakistan cricket issue

Share

2005-ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று எந்த கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு 2023-ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை (18.10.2020), இது குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, “ஆசியக் கோப்பை போட்டி பொதுவான இடத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அப்படி நடத்தினால் மட்டுமே இந்தியா பங்கேற்கும். நாங்கள் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம்” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பையில் கலந்துகொள்ளாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்

இந்நிலையில் இன்று நடந்த கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்புக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இதுதொடர்பாக பேசியிருக்கிறார்.

“ஒருநாள் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தியா யாருடைய பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை. அதில் பங்கேற்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை அன்புடன் அழைக்கிறோம். போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும். விளையாட்டுக்குக் குறிப்பாக கிரிக்கெட்டுக்கு இந்தியா நிறையப் பங்களித்துள்ளது. கிரிக்கெட்டில் இந்தியாவின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது. எனவே அடுத்த ஆண்டு உலகக்கோப்பை போட்டி இங்குதான் நடைபெறும். அது ஒரு பிரமாண்டமான வரலாற்று நிகழ்வாக அமையும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com