விருதுநகரில் வங்கியாளர்களின் சேவை மற்றும் பயனாளிகளின் பலன் குறித்த ஆய்வு கூட்டம் மத்திய அரசின் நிதி இணை அமைச்சர் பகவத் காரத் தலைமையில் நடந்தது. கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பகவத் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவில் முன்னேற விழையும் மாவட்டங்கள் 112 உள்ளன. அதில், விருதுநகர் மாவட்டம் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது பெருமையளிக்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய அளவில் 1 லட்சம் பேருக்கு 14 வங்கி கிளைகள் உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் 13 வங்கி கிளைகள் உள்ளன. எனவே உடனடியாக 15 வங்கிக் கிளைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்.
“வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது!” – மத்திய அமைச்சர் பகவத் காரத் | central minister bhagwat karad speech at virudhunagar financial inclusion review meet
Share