சென்னை: முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் உட்பட 12 அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் கொள்ளை, குறிகோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெங்கடாச்சலம், கோவிந்தராஜ் ஆகியோரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயபார்த்திபன், கண்ணகி குப்புசாமி, சுரேஷ்குமார் ஆகியோரும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சீஜிராஜ், கருப்பூர் கா.ராஜகோபால், துறையூர் கணேஷ் பாண்டியன், வினோபாஜி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.