பெரிய திட்டங்களை நிறைவேற்றினோம்: எடப்பாடி பேட்டி

Share

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் பெரிய அளவிலான திட்டங்களை நிறைவேற்றி காட்டினோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த ஓராண்டு ஆட்சியில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டவில்லை. அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதை தடுக்க ஒரு திட்டத்தை தீட்டி பிரதமரிடம் வழங்கியதன் அடிப்படையில் நடந்தாய் வாழி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம். விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் அதிக அளவில் இழப்பீடு பெற்று தந்தது அதிமுக. 6 மாவட்டங்கள், 7 கோட்டங்கள், 27 வட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கினோம். கொரோனா காலத்திலும் அதிக தொழில் முதலீட்டை ஈர்த்தோம். கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்தது அதிமுக அரசு. சென்னை மாநகரில் குற்றங்களை தடுக்க சிசிடிவி பொருத்தினோம். அதிக அளவிலான சாலைகளை விரிவாக்கம் செய்து, தரமான சாலைகளை அமைத்து கொடுத்தோம். அதிக அளவிலான தார்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி காட்டினோம். இப்படி பல்வேறு பெரிய திட்டங்களை நிறைவேற்றினோம். இவ்வாறு கூறினார். 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com