
1 லிட்டர் சுத்தமான நீரில் 6 தேக்கரண்டி சர்க்கரை, அரைத் தேக்கரண்டி பொடி உப்பு ஆகியவற்றைக் கலந்தால் ORS குடிநீர் தயார்.

தயாரித்த குடிநீரை 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அக்கரைசலில் குறிப்பிட்ட அளவுக்குக் கூடுதலாக சர்க்கரை சேர்க்கக்கூடாது.

ORS குடிநீர் தயாரிக்க தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பால், பழச்சாறு, குளிர்பானங்கள் என வேறெதுவும் பயன்படுத்தக் கூடாது.

நாளொன்றுக்கு 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை லிட்டர், 2 – 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 1 லிட்டர், 10 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 லிட்டர் வரையிலும் ORS குடிநீர் கொடுக்கலாம்.

ORS குடிநீரை மட்டுமே முழுத்தீர்வாக எண்ணி விடாமல் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.