pandian stores meena s cheesy white sauce macaroni cooking vlog | பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா செய்த ‘சீஸி ஒயிட் சாஸ் மக்ரோனி‘

Share

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனாவாக நடிக்கும் ஹேமா பெரும்பாலும் சீரியலில் சமைக்க தெரியாத , கிட்சனி வேலை பார்க்கவே விரும்பாத ஒரு கதாபாத்திரமாக இருப்பார். இதனாலேயே அவருடைய ரசிகர்களுக்கு உண்மையிலேயே ஹேமாவிற்கு சமைக்க தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை நிரூபிக்கவே இந்த குக்கிங் வீடியோவை பதிவு செய்துள்ளார் ஹேமா.

அந்த வீடியோவில் ஹேமா “ எனக்கு நல்லாவே சமைக்க தெரியும். ஓரளவேனும் சாப்பிடும்படியாக சமைப்பேன் என்று கூறியுள்ளார். அதோடு அதை நிரூபிக்கும் விதமாக உங்களுக்காக சீஸி ஒயிட் சாஸ் மக்ரோனி சமைத்து காட்டப்போகிறேன் என வித்தியாசமாக செய்து அசத்துகிறார். அதோடு இதை பெரிய கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டும் எனில் குறைந்தபட்சம் 350 ரூபாய் இருக்கும். ஆனால் இதை வீட்டில் செய்வது மிக மிக எளிமையானது. அவ்வளவு பொருட்செலவும் ஆகாது என்கிறார். சரி அவருடைய ரெசிபியை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மக்ரோனி – 1 கப்

எண்ணெய் – 1/2 tsp

கேரட் – 3 tsp

ஸ்வீட் கார்ன், குடைமிளகாய் – 2 tsp

ஒரிகனோ – 1/4 tsp

ஒயிட் சாஸ் செய்ய :

வெண்ணெய் – 3 tsp

பால் – 1/2 கப்

மைதா – 1/4 கப்

உப்பு – தே.அ

சீஸ் – 3 ஸ்லைஸ்

செய்முறை :

முதலில் மக்ரோனியை வேக வைக்க வேண்டும். அதற்கு பாத்திரத்தில் மக்ரோணி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் கேரட், கார்ன் , குடைமிளகாயை எண்ணெயில் வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக சாஸ் செய்ய கடாயை மிதமான சூட்டில் வைத்து வெண்ணெயை உருக்க வேண்டும்.

பின் பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். கொதித்ததும் மைதா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

அடிக்கும் வெயிலுக்கு இப்படியொரு ’ஆரஞ்சு மூஸ்’ பானம் குடித்தே இருக்க மாட்டீங்க : வீட்டில் தயாரிக்க ரெசிபி..!

நன்கு கிளறி கெட்டிப்பதம் வரும் போது வதக்கிய கேரட் , கார்ன், குடைமிளகாய் கலவையை சேர்க்க வேண்டும்.

பின் மக்ரோனியை சேர்த்து ஓரிகனோவை தூவி நன்கு கிளறுங்கள்.

இறக்குவதற்கு சில நொடிகளுக்கு முன் சீஸ் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் சீஸ் ஒயிட் சாஸ் மக்ரோணி தயார்.

இதை வீட்டில் நீங்களும் செய்து அசத்துங்கள்.

 

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com