நலம் தரும் இஞ்சி: புளி இஞ்சி | tamarind ginger

Share

செய்திப்பிரிவு

Last Updated : 23 Mar, 2020 11:38 AM

Published : 23 Mar 2020 11:38 AM
Last Updated : 23 Mar 2020 11:38 AM

என்னென்ன தேவை?

தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிய இஞ்சி – 50 கிராம்

நறுக்கிய பச்சை மிளகாய் – 5

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம், மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன்

கெட்டியாகக் கரைத்த புளி விழுது – 3 டீஸ்பூன்

தாளிக்க நல்லெண்ணெய் – 50 கிராம்

கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய்யை ஊற்றிச் சூடாக்கிக் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்குங்கள். உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், புளி விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். விரும்பினால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம். புளிக் காய்ச்சல் பதத்தில் இறக்கி வையுங்கள்.

– குறிப்பு: லட்சுமி சீனிவாசன் | தொகுப்பு : ப்ரதிமா

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com