மற்றொரு கோவிட் 19 அலையை உருவாக்குமா BA.4 வேரியன்ட்? மருத்துவர் சொல்வது இதுதான்! | how will be the effect of new covid variant BA 4

Share

இப்போதைக்கு இந்தத் திரிபுகள் தீவிர நோயை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பல நாடுகளில், பல இடங்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அடுத்து இது எளிதில் பரவும் தன்மை கொண்டது என்பதும் உறுதியாகியிருக்கிறது. எனவே சில இடங்களில் புதிய அலைகள் உருவாக இந்த உருமாற்றங்கள் காரணமாகலாம்.

பிஏ1 எனப்படும் ஒரிஜினல் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்குக்கூட இந்த உருமாற்றம் மீண்டும் தொற்றை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்று தெரிகிறது. குழு எதிர்ப்பு சக்தியெல்லாம் உதவாது என்பதும் புரிகிறது. ஒமிக்ரான் தொற்றுக்குள்ளானவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், முழுமையாகச் செலுத்திக் கொள்ளாதவர்கள், அதிலும் இணைநோய்கள் உள்ளவர்கள், வயதானவர்களுக்கு, மூன்றாம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இந்தத் தொற்று மீண்டும் வரலாம்.

Covid Outbreak (Representational Image)

Covid Outbreak (Representational Image)
AP Photo/Jean-Francois Badias

எனவே அடுத்த அலை குறித்த அச்சம் தவிர்த்து, எப்போதும்போல கவனமாக இருப்பதைப் பின்பற்றுவோம். முகக்கவசங்களைத் தவிர்க்க வேண்டாம். அதிக கூட்டமுள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். கை சுகாதாரம் பேணுவது, சுற்றுப்புறத்தை காற்றோட்டத்துடன் வைத்திருப்பது, தடுப்பூசிகளின் தவணைகளை தவறாமல் போட்டுக்கொள்வது போன்ற விஷயங்கள் மட்டும்தான் நம்மைக் காப்பாற்றும்.”

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com