ஸ்கின் ஹேக்ஸ்: உருளை சாப்பிடுவதால் ஏற்படும் சருமப் பாதுகாப்பு | Skin hacks: The skin protection caused by eating potatoes

Share

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு உருளைக்கிழங்கு. இதை உணவாக மட்டுமில்லாமல் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தலாம். 5000 வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்கள் உருளையை சருமப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தி வந்துள்ளனர். தொல்லியல் சான்றுகளைக் கொண்டு பார்க்கும் போது, பெருவில் உருளையின் தோல்களை சரும எரிச்சலை ஆற்றும் மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். உலகில் சில பகுதிகளில் இதனை சோப்பாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். காலம் மாறமாற உருளை நம்முடைய சமையலில் முக்கிய பொருளாக பயன்பட ஆரம்பித்தது.

உருளை சாப்பிடுவதால் ஏற்படும் சருமப் பாதுகாப்பு

* இதில் உள்ள பாலிபினால்ஸ் சூரிய கதிர்களால் ஏற்படும் கருமையை நீக்கி, களைப்படைந்த சருமத்தை சீராக்கும்.

* உருளை சாற்றில் துத்தநாகம் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள வடு மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.

* இதில் உள்ள இரும்புச் சத்து உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க உதவும்.

* அசிலைக் ஆசிட் தன்மை கொண்டதால், இயற்கையாகவே சருமம் பளிச்சிட உதவும். அசிலைக் மற்றும் சைடோகைன் இரண்டும் முகப்பருவினால் ஏற்படும் பாதிப்பையும் நீக்கும்.

* உருளையில் அதிக அளவு லைசின் என்ற புரதச் சத்து உள்ளதால், இது சருமத்தில் உள்ள தசைகள், முடி மற்றும் விரல் நகங்களை சீராக்க உதவும்.

* விட்டமின் சி சருமத்தில் தோன்றும் சுருக்கத்தை நீக்கி இளமையாக இருக்க உதவும். உருளை சாற்றில் அதிக அளவு விட்டமின் சி உள்ளதால் என்றும் இளமையாக இருக்க உதவும்.

* பொட்டாசியம்  ரத்தத்தை  சுத்திகரிக்க உதவும்.

* இதில் உள்ள ஹயாலுரானிக் அமிலம் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கும்.

* உருளை தோலில் ரைபோபிளேவின், அஸ்கார்பிக் அமிலம், போலிக் அமிலம் மற்றும் விட்டமின் பி இருப்பதால் கண், சருமம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு சிறந்தது.

உருளை அழகு குறிப்புகள்

* உருளை பவுடர்+1 டீஸ்பூன் ஓட்ஸ்+2 டீஸ்பூன் தயிர். இவற்றை கலந்து முகத்தில் தடவி காய்ந்தபின் வட்டவடிவத்தில் தேய்த்து கழுவலாம். வாரத்தில் இரண்டு முறை செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.

* உருளை பவுடர்+2 டீஸ்பூன் குளிர்ந்த பால். இவற்றை கண்களைச் சுற்றி தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையம் மறையும்.

* உருளை பவுடர்+3 டீஸ்பூன் பன்னீர். நீர்க்க கரைத்து அதில் டிஷ்யு பேப்பரை நனைத்து முகத்தினை மூடி 15 நிமிடம் கழித்து எடுத்தால், சருமம் பளிச்சென்று இருக்கும்.

தொகுப்பு: ரிதி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com