ஆஸ்கர் பிஸ்டோரியஸின் விளையாட்டு எதிர்காலம் என்ன?

Share

ஆஸ்கர் பிஸ்டோரியஸ்

பட மூலாதாரம்,

படக்குறிப்பு,

ஆஸ்கர் பிஸ்டோரியஸ்

கொலை நோக்கம் இல்லாமல் இடம்பெற்ற ஒரு மரணத்தை விளைவித்தற்காக, நீதிமன்றதால் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ள தென் ஆப்ரிக்க வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸின் விளயாட்டு எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

உலகளில் தலைசிறந்த தடகள வீரர்கள் பங்குபெறும் டயமண்ட் லீக் போட்டிகளில் பங்குபெற இனி ஆஸ்கர் பிஸ்டோரியஸ் அழைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று, அந்தப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

பிரசல்ஸில் நடைபெறும் டயமண்ட் லீக் போட்டிகளின் தலைவரான வில்ஃபிரெட் மீர்ட், இனி அவருக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதே கருத்துதான் மற்ற டயமண்ட் லீக் போட்டிகளை நடத்துவர்கள் மத்தியிலும் இருக்கக் கூடும் என்று, தான் நம்புவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“பங்கேற்க முடியும்”

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

நீதிமன்றத்தில் பிஸ்டோரியஸ்

ஆனாலும், அவர் சிறைக்கு செல்லாவிட்டால், 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்று சர்வதேச பாராலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது.

போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று நீதிபதி கூறாதவரை, ஆஸ்கர் பிஸ்டோரியஸ் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்று தென் ஆப்ரிக்க விளையாட்டு சம்மேளங்கள் மற்றும் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் டப்பி ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தால் கண்டறியப்பட்டு குற்றப் பேரேடுகளில் பெயருள்ள எவரும் தேசத்துக்காக விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என தென் ஆப்ரிக்க ஒலிம்பிக் சங்கத்தின் விதிமுறைகளில் இல்லை என்றும் ரெட்டி கூறினார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com