செஸ் ஒலிம்பியாட் 2022: இந்தியா வெற்றி வாகை சூட நல்ல வாய்ப்பு உள்ளது – ஏன்?

Share

  • சூசன் நைனன்
  • விளையாட்டு செய்தியாளர்

செஸ் ஒலிம்பியாட் 2022:

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கடந்த 2013ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் நடந்தபோதுதான் ‘சதுரங்க விளையாட்டு’ தேசிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்த விளையாட்டு மீதான அனைவரது பார்வையும் இந்தியா மற்றும் இந்திய அணி மீது திரும்பியிருக்கிறது.

இந்தியா முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டி தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 10 வரை ஒலிம்பியாட் நடைபெறுகிறது.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் மாமல்லபுரம் வந்தடைந்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட்டின் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குழு போட்டியில் இந்தியா 2014ஆம் ஆண்டில் ஒருமுறை மட்டுமே வெண்கல பதக்கம் வென்றுள்ளது. அப்போது இந்தியா தர வரிசையில் 19ஆம் இடத்தில் இருந்தது. இளமையான மற்றும் வலிமையான கிராண்ட்மாஸ்டர்கள் கொண்ட இந்திய அணி, ஒலிம்பியாட் போட்டியில் தன் முழு திறமையை வெளிக்காட்ட தயாராக உள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com