இன்றைய டாப்10 செய்திகள் | Tamil Top 10 News Today
1) பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய உத்தரவு.
2) கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாதகமாக நடந்து கொள்ள பேரம் பேசப்பட்டவர்கள் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டி. சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகியை அடையாளம் காட்டியதால் பரபரப்பு .
3) தன் மீது பொய்குற்றச்சாட்டு பேசப்படுவதாக அதிமு நிர்வாகி இளங்கோவன் விளக்கம். பேரம் பேசிய நபரை நேரில் பார்தது கூட இல்லை என விளக்கம்.
4) ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
5) பெரம்பலூர் எம்.எல்.ஏவை தொடர்ந்து அறந்தாங்கி எம்எல்ஏ-வுக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
6) கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவிப்பு. பஞ்சாபில் பள்ளி, கல்லூரிகள் மூடல்.
7) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து தேர்வுத்துறை உத்தரவு.
8) புதுக்கோட்டையில் குண்டடிப்பட்டு உயிரிழந்த சிறுவனில் உடல் அடக்கம். வீட்டிற்கு கொண்டு செல்லாமல் மயானத்திற்கு நேரடியாக கொண்டு சென்றதால் போலீசாருடன் உறவினர்கள் தள்ளுமுள்ளு.
9) மணிப்பூரில் 4800 கோடி மதிப்பில் புதிய திட்டடங்களை தொடங்கி வைத்தார் மோடி. இந்தியாவின் வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என பேச்சு.
10) தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாகூர் அபார பந்துவீச்சு. 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தல்.