Commonwealth: தொடர்ந்து 3 முறை தங்கப் பதக்கம் வென்று மீராபாய் சாதனை – இந்தியாவுக்கு முதல் தங்கம்! | Mirabai Chanu wins India’s first gold at Commonwealth Games 2026 in weightlifting

Share

அந்தச் சாதனைகளில் நிற்காமல், 2022 மற்றும் 2026 காமன்வெல்த் போட்டிகளில் தனது சொந்த சாதனைகளையே முறியடித்து, ஒவ்வொரு முறையும் தனது எல்லைகளைத் தாண்டிச் செல்லும் சாம்பியனாக மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார்.

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான நோங்போக் காக்சிங்கில் பிறந்த மீராபாய் சானுவின் பயணம், இன்று உலகமே கொண்டாடும் ஒரு வெற்றிக் கதையாக மாறியுள்ளது. ஆறு உடன்பிறப்புகளில் இளையவரான அவர், வசதிகள் குறைந்த குடும்பத்தில் வளர்ந்தாலும், மன உறுதியிலும் உடல் வலிமையிலும் சிறுவயதிலேயே தனித்துவமாகத் திகழ்ந்தார்.

வெறும் 12 வயதிலேயே, தனது மூத்த சகோதரர்களால் கூட சுமக்க முடியாத விறகுக் கட்டையை எளிதாகத் தோளில் சுமந்த அந்தச் சிறுமிக்குள் ஒரு சாம்பியன் ஒளிந்திருப்பதை அப்போது யாரும் உணரவில்லை. அந்த இயல்பான வலிமையே அவரை பளுதூக்குதல் உலகை நோக்கி அழைத்துச் சென்றது. தனது

கனவை நனவாக்குவதற்காக, சொந்த கிராமத்திலிருந்து இம்பாலில் உள்ள விளையாட்டு அகாடமிக்கு தினமும் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளில் பயணித்து பயிற்சிக்குச் சென்றார்.

சவால்கள், வறுமை, நீண்ட பயணங்கள் என ஒவ்வொரு தடையையும் தாண்டி முன்னேறிய அந்தச் சிறுமிதான், இன்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் மீராபாய் சானுவாக உயர்ந்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com