எஸ்.ஜானகிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு – தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி – இளையராஜா கூறியது என்ன?

Share

எஸ்.ஜானகி மறைவு

பட மூலாதாரம், X/S Janaki

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மறைந்த பின்னணி பாடகி ஜானகி இறுதிச்சடங்குகள் மைசூரில் நடைபெற்றன.

முன்னதாக அவரது உடலுக்கு தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மைசூரில் உயிரிழந்த அவரது உடல் அங்குள்ள மகாராஜா மைதானத்தில் வைக்கப்பட்டதாக பிடிஐ செய்தி கூறுகிறது. அங்கு பொதுமக்கள் திரளானோர் வந்து ஜானகி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஷார்ட் வீடியோ

காணொளிக் குறிப்பு, அரசு மரியாதையுடன் விடைபெற்றார் பாடகி ஜானகி

அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

எஸ்.ஜானகி மறைவு

பட மூலாதாரம், ANI

ஜானகியின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

“இறுதிச் சடங்கில் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் யதிந்தரா சித்தராமையா கலந்துகொள்வார். தனது அற்புதமான குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த சிறந்த பாடகியை மரியாதையான முறையில் வழியனுப்ப அரசு முடிவெடுத்துள்ளது,” என கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்தின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com