‘தவெக அரசு முடியும் போது கடன் 15 லட்சம் கோடியா இருக்கும், எழுதி வச்சுகோங்க’ – மாநாட்டில் அண்ணாமலை |annamalai speech at We The Leaders first maanadu

Share

இன்னும் நமக்கு 5 வருடங்கள் இருக்கிறது. வெவ்வேறு இடங்களில் இருந்து தலைவர்களும், தொண்டர்களும் வர இருக்கிறார்கள். சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்தது போதும். 2031-ல் ‘we the leaders’ அமைப்பு ஆரோக்கியமான அரசியல் கட்சியாகத் தான் மாறப்போகிறது.

2026ல் 1.68 கோடி பேர் வாக்களித்து விஜய்யை தேர்ந்தெடுத்துள்ளனர். அனைவரும் முதல்முறை அமைச்சர்கள். செங்கோட்டையனை தவிர. நிர்வாகம் புதிது. தடுமாற்றம் இருக்கும். அவர்களை கைத்தூக்கி விட தான் வேண்டும். அற்ப அரசியலுக்காக இந்த அமைப்பு இருக்காது. சரியான எண்ணிக்கையும் சரியான தலைவர்கள் வரும் போதும் கட்சியாக மாறும்.

தவெக அரசு இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி கடன் வாங்க தான் போகிறார்கள். தவெக அரசு முடியும் போது கடன் 15 லட்சம் கோடியாக இருக்கும். எழுதிவைத்து கொள்ளுங்கள். பாஜகவை திட்டவில்லை என்பதால் அண்ணாமலை பாஜகவின் பி டீமா? என்று திமுகவினர் விமர்சிக்கின்றனர்.

இறுமாப்புடன் சொல்கிறேன் நான் ஒரு தேசியவாதி. நான் ஒரு இந்து. அதை காட்ட வேண்டிய அவசியமில்லை. மதத்தை, சாதியை வீட்டில் பூட்டி வைத்து விட்டு வந்தாலே உண்மையான இந்துக்களுக்கு புரியும்

எதிர்காலத்தில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும்? மெய்யான சமூகநீதி, நிலையான வளர்ச்சி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும். என் மண், என் மக்கள் தொழிற்சங்க அமைப்பைத் தொடங்கியிருக்கிறோம். அதிலும் உங்களை இணைத்து கொள்ளுங்கள். அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்ல வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com