எமிலி ஈடன்: ஓவியங்கள் மூலம் இந்தியாவை துல்லியமாக காட்சிப்படுத்திய ஆங்கிலேயப் பெண்

Share

எமிலி ஈடன், ஓவியங்கள் இந்தியா, ஆங்கிலேயப் பெண்

பட மூலாதாரம், DAG

படக்குறிப்பு, சிம்லாவில் வரையப்பட்ட இந்தக் குடும்பத்தினர் லடாக்கைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கோடைக்காலத்தில் மலைப்பாதைகளைக் கடந்து வரும் இமயமலைப் பகுதி வியாபாரிகளின் உடைகளையும் நகைகளையும் இது பிரதிபலிக்கிறது.

    • எழுதியவர், சுதா ஜி திலக்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

புகைப்படம் எடுக்கும் கலை பிரிட்டிஷ் பேரரசின் காட்சிமொழியாக மாறுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் இந்தியா முழுவதும் தான் சந்தித்த மனிதர்களை மிகுந்த ஆர்வத்துடனும், அசாத்திய துல்லியத்துடனும் ஓவியங்களாகத் தீட்டிக் கொண்டிருந்தார்.

திறமையான கலைஞரும் எழுத்தாளருமான எமிலி ஈடன், பிரிட்டனின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த தனது சகோதரர் ஜார்ஜ் ஈடன் (ஆக்லாந்தின் முதல் ஏர்ல்) உடன் அவர் 1830-களில் வட இந்தியா முழுவதும் பயணம் செய்தார்.

இளவரசர்கள், தளபதிகள் மற்றும் அரசவை உறுப்பினர்கள் மட்டுமல்லாது, பணியாளர்கள், உதவியாளர்கள், பயணிகள், ஃபக்கீர்கள், ஆப்கானிய மற்றும் சீக்கிய பிரபுக்கள், அகாலி போர்வீரர்கள், மலைவாழ் சமூகத்தினர் மற்றும் ஏகாதிபத்திய பயணங்களில் உடன் வந்த விலங்குகளையும் அவர் வரைந்தார். சமூகம் குறித்த அவரது பரந்த பார்வை பல சமகாலத்தவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது.

அவரது இருபதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் 1844ஆம் ஆண்டில் ‘போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் தி பிரின்சஸ் அண்ட் பீப்பிள் ஆஃப் இந்தியா’ என வெளியிடப்பட்டன. ஈடன் வரைந்த அசல் ஓவியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கையால் வண்ணம் தீட்டப்பட்ட லித்தோகிராஃப்களின் அந்த முழுமையான தொகுப்பு, தற்போது டெல்லியில் உள்ள டிஏஜி கலைக்கூடத்தில் நடைபெற்று வரும் ‘பிரின்சஸ் & பீப்பிள்’ கண்காட்சியின் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது. கலை வரலாற்றாசிரியரான மேரி ஆன் பிரியர் இந்தக் கண்காட்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

எமிலி ஈடன், ஓவியங்கள் இந்தியா, ஆங்கிலேயப் பெண்

பட மூலாதாரம், DAG

படக்குறிப்பு, இடதுபுறத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆனந்த் மாசே என்ற ஆசிரியரை ஈடன் வரைந்துள்ளார். வலதுபுறத்தில், அரசர் ஃபதே பிரகாஷ் தனது மகன்களுடன் பாரம்பரிய உடை மற்றும் நகைகளுடன் காட்சியளிக்கிறார். வட இந்தியா முழுவதும் ஈடன் சந்தித்த பல்வேறு தரப்பட்ட மக்களின் மீதிருந்த அவரது ஈடுபாட்டை இந்த உருவப்படங்கள் காட்டுகின்றன.

1836 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஈடன் கல்கத்தாவிற்கு (தற்போதைய கொல்கத்தா) வந்தடைந்தபோது, ​​அங்கு ஏராளமான அலுவல் பணிகளும், அறிமுகமில்லாத ஓர் உலகமும் அவரைச் சூழ்ந்திருந்தன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com