”சினிமாவில் கஷ்டப்பட்டு ஜெயிக்க நினைப்பவர்களுக்கான மேடை இது!” – பாரி இளவழகன் நெகிழ்ச்சி | “This is platform for those who want to succeed in cinema through hard work” – Pari Ilavazhagan expresses his emotion

Share

என்னுடைய முதல் படமான ‘ஜமா’ தியேட்டர்களில் பெரிய அளவில் போகாதபோதும், அதை ஓடிடியில் பார்த்துவிட்டு, “ஜமாவைத் தவறவிட்டுவிட்டோம், ஆனால் ‘அன்பே டயானா’ படத்தைக் கண்டிப்பா தியேட்டரில் பார்ப்போம்” என்று அன்பைக் கொட்டும் தமிழ் ரசிகர்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

என் வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியாகவும், எனக்குக் கிடைத்த சின்ன முகவரிக்கும் காரணமான இசைஞானி இளையராஜா சாருக்கு என் முதல் நன்றி.

அன்பே டயானா ரோஜா

அன்பே டயானா ரோஜா

இந்தப் படத்திலும் அவருடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே ‘செனோரிட்டா’ பாடலை வைத்துள்ளோம். “டைரக்ஷன் மட்டும் பண்ணுங்க, ஹீரோ வேற ஆளைப் போடலாம்” என்று பலரும் சொன்னபோது, என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, இவ்வளவு பெரிய மேடையை யுவராஜ் ப்ரோ எனக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்.

என்னுடைய பெரம்பூர் நண்பர்கள், சென்னை புல்ஸ் மற்றும் கல்லூரி நண்பர்களின் நிஜ வாழ்க்கைக் கதைகளை உற்றுநோக்கித்தான் நான் இந்தத் திரைக்கதையை உருவாக்கியுள்ளேன்.

டெரரான கதாபாத்திரங்களில் நடித்துப் பழகிய சேத்தன் சார், இதில் முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரில்லியன்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com