இரான் மீது அமெரிக்கா ‘சக்திவாய்ந்த தாக்குதல்’ – என்ன நடக்கிறது?

Share

ஹோர்மூஸ் நீரிணையில் எண்ணெய் டேங்கர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், ஏமி வாக்கர் மற்றும் டேபி வில்சன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் டேங்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் மீது அமெரிக்கா “சக்திவாய்ந்த” தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

இந்த நீரிணையில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-இரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என்று இரானின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்ததுடன், தெஹ்ரான் “தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும்” என்றும் எச்சரித்தார்.

கெஷ்ம் தீவு, பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய இடங்கள் தாக்கப்பட்டதாகவும், அங்கு சிதறிய குண்டுத் துகள்களால் மக்கள் காயமடைந்துள்ளதாகவும் இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்குவதற்கு காரணமான, மூன்று டேங்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு இரான் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.

அந்த 60 சிறிய படகுகளுடன் சேர்த்து, இரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கட்டளை மையங்களையும் தான் தாக்கியுள்ளதாக சென்ட்காம் கூறியுள்ளது. அது தனது இலக்குகளின் இடங்களை வெளியிடவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com