அதாவது தான் ஆடியதில் ஜோ ரூட் கேப்டன்சியில்தான் தான் நன்றாக ஆடியதாகக் கூறப்போக, அப்ப நான் நல்ல கேப்டன் இல்லன்னு சொல்ல வர்றியா என்று அலிஸ்டர் குக் கேட்க அது வாக்குவாதமாக மாறியது.
“ரூட் வீரர்களுடன் உணர்ச்சிப்பூர்வமாக ஒட்டக் கூடியவர் வீரர்களுடன் அதிக நேரம் செலவிடுவார் ரூட்” என்று மொயின் அலி கூறினார்,
உடனே அலிஸ்டர் குக், “அப்ப என் கேப்டன்சியை விமர்சிக்கின்றீர்களா?” என்றார்
அதற்கு மொயின் அலி, “ஆம், கொஞ்சம் கொஞ்சம் விமர்சிக்கிறேன். நீங்கள் இருவரும் வேறு வேறு கேப்டன்கள், குக் கேப்டன்சியில் பேட்டிங்கில் நன்றாக ஆடினேன், ஆனால் பந்து வீச்சில் நான் சிறப்பாக வீசியது ரூட்டினால்தான்” என்றார்.
மொயின் அலி, குக் சண்டை வீடியோ:
— Liam O’Connor (@liamoconnorrrr) January 5, 2022
இதற்கு குக் கடுப்பாகிவிட்டார், “ஆனால் நான் மொயின் அலியை ஒருமுறை கூட அணியிலிருந்து நீக்கவில்லை. மொயின் அலி என்னை விமர்சிக்கலாம், ஆனால் நான் அவரை டிராப் செய்ததில்லை, ரூட் உங்களை எத்தனை முறை நீக்கியிருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்.
இதற்கு மொயின் அலி, “அது உண்மைதான், ஆனால் அவர் கேப்டன்சியில் நான் 1ம் நிலையிலிருந்து 9ம் நிலை வரை பேட் செய்திருக்கிறேன், அதுவும் என் முதல் சர்வதேச கிரிக்கெட் ஆண்டில்” என்றார்.
மேலும் மொயின் அலி கூறும்போது, “ரூட் பிளேயர்களிடம் கூடுதல் ஈடுபாடு காட்டுவார், அதற்காக குக் அப்படியல்ல என்று நான் சொல்ல வரவில்லை. ரூட் கொஞ்சம் இமோஷனல் கேப்டன் என்றுதான் கூறுகிறேன்” என்றார் அலி.
உடனே குக், சமாதானம் அடையாமல், “நான் இனியும் இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை. நான் இப்போதுதான் விடுமுறையிலிருந்து திரும்பியுள்ளேன் என்று ஜோக்குடன் குக் முடித்து விட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.