SRH Vs RR: 2 அறிமுக பந்துவீச்சாளர்களின் அசத்தல் பௌலிங் – சன்ரைசர்ஸ் அபார வெற்றி

Share

ஐபிஎல் வரலாற்றில் தான் பந்துவீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் பிரஃபுல் ஹிங்கே

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஐபிஎல் வரலாற்றில் தான் பந்துவீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் பிரஃபுல் ஹிங்கே

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 21வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

இதற்கு முன் விளையாடியிருந்த 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் சந்திக்கும் முதல் தோல்வி இது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் 91 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சன்ரைசர்ஸ் அணியின் இரு அறிமுக வேகப்பந்துவீச்சாளர்கள் பிரஃபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன் இருவரும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com