நெல்லுக்கு ஊக்கத்தொகை தருவதை மத்திய அரசு நிறுத்தச் சொல்கிறதா? ஸ்டாலின் குற்றச்சாட்டின் பின்னணி

Share

நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகையை மத்திய அரசு நிறுத்தச் சொல்கிறதா? ஸ்டாலின் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் பேசியபோது தெரிவித்தார்.

இந்த ஊக்கத்தொகை நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதாகக் குறிப்பிட்டு, மத்திய நிதியமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.

“நெல் உற்பத்தி அதிகரித்திருப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாக அந்தக் கடிதம் கூறுகிறது. எனவே நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை மாநில அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது,” என ஸடாலின் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என தெரிவித்துள்ளார்

சட்டமன்ற தேர்தல் களத்தில் எதிர் தரப்பினர் மீது பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் வாரியிறைக்கப்படும் இந்த வேளையில், ஸ்டாலினின் இந்த பேச்சு விவசாயிகளிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கங்கள் என்ன சொல்கின்றன? பாஜக கூறுவது என்ன?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com