GT vs RR: “அதற்கான முக்கியமான ஆலோசனையை த்ருவ் ஜுரேல் அளித்தார்”- ரியான் பராக்| rr captain riyan parag post match speech

Share

19 மற்றும் 20வது ஓவர்களில் யாரை பந்துவீச விடுவது என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அதற்கான முக்கியமான ஆலோசனையை த்ருவ் ஜுரேல் அளித்தார்.

19வது ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் கொடுக்கலாம் என்று அவர் கூறினார். அந்த நேரத்தில் நிலைமை கடினமாக இருந்தாலும், வேகமாகவும் தைரியமாகவும் செல்வோம் என்ற அணுகுமுறையையே எடுத்தோம்.

வேலை செய்தால் சிறப்பு, இல்லையென்றாலும் அதை ஏற்றுக்கொண்டு அடுத்த முறை மீண்டும் முயற்சிப்போம் என்ற மனநிலையுடன் சென்றோம்.

RR கேப்டன் ரியான் பராக்

RR கேப்டன் ரியான் பராக்

ஜுரேல் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவர் பல முறை கீழ் வரிசையில் விளையாடியிருக்கிறார். ஆனால் இப்போது அவருக்கு மேல் வரிசையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அதைப் பயன்படுத்தி அவர் தன்னுடைய திறமையை நிரூபித்தார். இது அவருக்கான நல்ல தொடக்கம், தொடர்ந்து பெரிய ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றிகள் கொண்டுவருவார் என நம்புகிறேன்.

இன்று வெற்றியை கொண்டாடுவோம். ஆனால் நாளை முதல் அடுத்த போட்டியை நோக்கி கவனம் செலுத்துவோம்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com