If Virat Kohli can get to 30… Michael Vaughan’s bold prediction ahead of India vs England 5th Test, இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட் விராட் கோலி 30 ரன்களைத் தாண்டி விட்டால் சதம்தான்

Share

விராட் கோலியின் பார்ம் குறித்து சகலவிதமான பேச்சுக்கள் புழங்கி வரும் நிலையில் இங்கிலாந்தின் திமிர் பேச்சு மைக்கேல் வான் கோலி குறித்து நம்பிக்கையுடன் கூறியது என்னவெனில், விராட் கோலி இன்று தொடங்கும் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் 30 ரன்களைத் தாண்டி விட்டால் செஞ்சுரி அடிப்பார் என்று கூறியுள்ளார்.

எட்ஜ்பாஸ்டனில் இந்தியா இன்னும் வெற்றி பெற்றதில்லை 7-ல் 6ஐத் தோற்று ஒரு ட்ரா செய்துள்ளனர். கடந்த முறை விராட் கோலி முதல் இன்னிங்சில் அதிரடி 149 ரன்களையும் 2வது இன்னிங்சில் 51 ரன்களையும் எடுத்து அசத்தினா, ஆனால் டெஸ்ட்டைத் தோற்று விட்டது இந்திய அணி.

இந்நிலையில் விராட் கோலி மட்டையில் பந்துகள் படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மைக்கேல் வான் கூறியதாவது:

இந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஒரு வீரரை நாம் கவனமாகப் பார்க்க வேண்டுமென்றால் அது விராட் கோலிதான். 2018-ல் இதே மைதானத்தில் ஒரு கிரேட்டஸ்ட் டெஸ்ட் சதத்தை எடுத்தார். அவர் சதம் எடுக்க வேண்டியது பாக்கி உள்ளது, அவர் 100 அடித்து எத்தனை காலம் ஆகிவிட்டது!!

எனவே இந்த டெஸ்ட்டில் அவர் 30 ரன்களை எட்டிவிட்டால் அடுத்து சதம் தான், அதாவது 30 ரன்களுக்குள் அவுட் ஆகவில்லை எனில் சதம்தான். இதை கோலி மிகவும் எதிர்பார்க்கிறார், அதற்காகவே ஆடுவார்.

என்றார் மைக்கேல் வான். பொதுவாக விராட் கோலி பற்றி நெகெட்டிவ் ஆகவே பேசி வரும் இவர் திடீரென இப்படிக் கூறி இங்கிலாந்தை எச்சரிக்கிறார் என்றே பார்க்க வேண்டியுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com