வைபவ் சூர்யவன்ஷி: இந்த 15 வயது வீரரை கிரிக்கெட் உலகம் ஏன் இனி புறக்கணிக்க முடியாது?

Share

வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

உலகின் பெரும் பணக்கார கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சனிக்கிழமை மீண்டும் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் மீது அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும்.

அதே சமயம், பலரது கண்கள் ஒரு இளம் சிறுவன் மீதும் இருக்கும்.

ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 27 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது நிறைவடைந்தது. இத்துடன் இந்திய கிரிக்கெட்டின் மிகவும் சுவாரஸ்யமான கேள்விகளில் ஒன்றின் மீது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் குவிந்துள்ளது: வைபவ் ஒரு பெரிய மேடைக்குத் தயாராகிவிட்டாரா?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தனது 12 வயதில் வைபவ் முதன்முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார். ஒரு போட்டியில் அவர் தனது தந்தையின் வயதுடைய பந்துவீச்சாளர்களை மிகக் கடுமையாகத் துவம்சம் செய்து கொண்டிருந்தார்.

அப்போதிருந்து அவரது பேட்டிங் தரம், குறிப்பாக அதிரடியான ஸ்டிரைக் ரேட்டுடன் பெரிய ஸ்கோர்களை எடுப்பதில் அவருக்கும் இருக்கும் பசி ஆகியவை விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com