கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் ரூ.9,713 கோடியை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் வழங்கிய மொத்த நன்கொடையின் மதிப்பு ரூ.18,070 கோடி. 2021-ல் ஷிவ் நாடார் ரூ.1,263 கோடியும், முகேஷ் அம்பானி ரூ.577 கோடியும் நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர். இவர்கள் முறையே கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,884 கோடியும், ரூ.1,437 கோடியும் நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர்.
உலகிலேயே அதிக அளவில் 102 பில்லியன் டாலர் நன்கொடை கொடுத்து கார்ப்பரேட்களின் பிதாமகன் என்று சொல்லப்படும் டாடா குழுமத்தின் நிறுவனரான மறைந்த ஜாம்ஷெட்ஜி டாடா முதல் இடத்தில் இருக்கிறார். பில் அண்டு மெலிண்டாகேட்ஸ் ஃபவுண்டேஷன் 74.2 பில்லியன் டாலர் நன்கொடை கொடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஹென்ரிவெல்கோம் 38.4 பில்லியன் டாலருடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.