பல சர்வதேச தொடர்ச்சியான ரேஸிங் தொடர்களில் முழுமையாக பங்கேற்ற முதல் இந்திய அணி,
சர்வதேச போடியம் வெற்றி, மற்றும் உலக தரத்திலான திட்டமிடல் மற்றும் குழு ஒருங்கிணைப்பு அனுபவம்.
இந்தப் பயணத்துக்கு துணை நின்ற ஒவ்வொருவருக்கும் இதயபூர்வ நன்றியைத் தெரிவிக்கிறது:
-
Series Organisers: Creventic, Prospeed, SRO சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவுக்காக.
-
Partner Teams: Redant Racing, AV Racing – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக.
-
Team Members: புதியவர்களும் பழையவர்களும் — உழைப்புக்காக.
-
Fans & Supporters: ஒவ்வொரு ரேஸிலும், ஒவ்வொரு பதிவிலும் அன்பு, ஊக்கம், நம்பிக்கை வழங்கியதற்காக.
-
Support Staff: பின்னணியில் உழைத்து ஒவ்வொரு ரேஸையும் சாத்தியமாக்கிய தொழில்நுட்ப பணியாளர்கள்.
முதல் சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் குமார் ரேஸிங் அணி இப்போது வெற்றி பெற்ற அணியாக மட்டுமல்ல, அனுபவத்தால் செழித்த அணியாகவும் திகழ்கிறது.
‘Porsche Cup’ மற்றும் ‘GT4’ போட்டிகளில் பெற்ற அனுபவம், எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.
அணி தற்போது தொடர்ந்து சோதனைகள், புதிய திட்டமிடல், மற்றும் சர்வதேச ரேஸிங் துறையில் தன் தடத்தை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்துகிறது.
இந்த பயணம் எங்களின் கடின உழைப்பும் தாழ்மையும் சேர்ந்த விளைவு. இதுவரை கற்றதையெல்லாம் அடுத்த கட்டப் பயணத்தில் இன்னும் சிறப்பாக பயன்படுத்துவோம்.” என்று கூறியிருக்கிறார் அஜித் குமார் மற்றும் ‘Ajith Kumar Racing’ அணி