அவருடைய திறன் எனக்குத் தெரியும். ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதை இவ்வளவு பெரிய நிகழ்வாக இதுவரை யாரும் பண்ணினது கிடையாது. அவருக்கு இந்தத் தயாரிப்பு நிறுவனம் வெற்றிகரமானதாக அமையணும்.
நான் சினிமாவுக்குள்ள வரணும்னு ஆசைப்பட்ட சமயத்துல ரவி அண்ணா ஸ்டன்ட் கிளாஸ்ல இருப்பாரு.
நாங்க 3 அடி ஜம்ப் பண்ணினால், அவர் உயரமான லெவலுக்கு ஜம்ப் செய்வாரு. அப்போ, இவர்கள் இருக்கிற சினிமாவுக்குத்தான் வரப்போறோம்னு கொஞ்சம் பயமா இருந்தது.
அப்போ ரவி அண்ணா எங்களைக் கூட்டிட்டு போய் ஜூஸ் வாங்கித் தருவாரு. நாங்க ஜூஸுக்குப் பணம் கொடுத்தாலும் வாங்கிக்க மாட்டாரு. பிறகுதான் அவர் என்னைவிட சின்ன பையன்னு தெரியவந்தது.
அப்போதான் அண்ணன் ரவியாக மாறினார். யாருக்கும் கெடுதல் நினைக்காத நபர்தான் ரவி. அவராலயும் அப்படி நினைக்க முடியாது. ரவிக்கு சினிமா பற்றி ஆழமாக அத்தனை விஷயங்களும் தெரியும்.
படிக்கவே இல்லனு சொல்லிட்டு நல்ல மதிப்பெண்கள் வாங்குபவர்களை மாதிரிதான் ரவியும் இருப்பான்.” என்றார்.
கார்த்தி பேசியது தொடர்பாக ரவி மோகன், “நானும் கார்த்தியும் பெரிதளவுல ஆடம்பரத்தை விரும்பாத நபர்கள். நாங்க இருவரும் சேர்ந்து தாய்லாந்துல வாக்கிங் போகும்போது ‘நீங்க ரெண்டு பேரும் அண்ணன், தம்பியா’னு கேட்டிருக்காங்க. அப்படியான அன்போட கார்த்திகூட வாழ்க்கை முழுவதும் ட்ராவல் செய்யணும்னு ஆசை இருக்கு.” என்றார்.