Pujara; test cricket; இந்திய வீரர் புஜாரா ஓய்வுபெற்றதையடுத்து சச்சின் முதல் பண்ட் வரை பலரும் அவரின் அடுத்தகட்ட வாழ்க்கைக்கு வாழ்த்து

Share

யுவராஜ் சிங்:

நாட்டுக்காக எப்போதும் தனது மனதையும், உடலையும் அர்ப்பணித்த ஒருவர். சிறப்பான கரியருக்கு வாழ்த்துகள்.

விவிஎஸ் லக்ஷ்மன்:

புஜாராவின் தைரியமும், மன உறுதியும் தனித்து நிற்கின்றன.

ஆஸ்திரேலியாவுக்கெதிராக வென்ற கப்பா டெஸ்டில் அவர் உடலில் ஏற்பட்ட காயங்கள், தனது நாட்டுக்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது.

மகிழ்ச்சியான இரண்டாவது இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள்.

பண்ட் - புஜாரா

பண்ட் – புஜாரா

முகமது கைஃப்:

புஜாராவின் பங்களிப்பை யாருடனும் ஒப்பிடுவது கடினம். மாடர்ன் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய ஒரு old school cricketer. மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டார்.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புவோர் அவரைப் பின்பற்ற வேண்டும்.

விருத்திமான் சஹா:

உங்கள் பொறுமையும் போராட்டமும் அணியை மிகவும் கடினமான தருணங்களில் உயர்த்துவதை நான் நெருக்கமாக இருந்து பார்த்திருக்கிறேன்.

உங்களுடன் மைதானத்தையும், டிரஸ்ஸிங் ரூமையும் பகிர்ந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன்.

ரிஷப் பண்ட்:

சிட்னி முதல் கப்பா என உங்களுடன் பேட்டிங் செய்தவை எனது சிறந்த நினைவுகளில் உள்ளன.

இந்திய கிரிக்கெட்டுக்கான உங்களின் பங்களிப்புகளையும், நமது பார்ட்னர்ஷிப்களையும் பொக்கிஷமாகக் கருதுவேன்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com