இந்திய கிரிக்கெட் வீரரான சாஹல் சமீபத்தில் கலந்துகொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்கை, மனைவியுடனான விவாகரத்து, மன அழுத்தம் என பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா மனைவியின் கருத்து குறித்து சஹால் பேசியிருக்கிறார். அதாவது சில வருடங்களுக்கு முன்பு ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ராவின் “Who”s The Boss?” (ஹூ இஸ் தி பாஸ்?) என்ற நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா சஜ்தே கலந்துகொண்தடிருந்தனர்.

அப்போது, சாஹலை ஒரே வார்த்தையில் விவரியுங்கள் என்று கேட்டப்போது ரோஹித் சர்மா விழுந்து விழுந்து சிரிக்க, ரித்திகா சற்றும் யோசிக்காமல், சாஹலை ஒரு ‘கார்ட்டூன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதைக் கேட்டு நிகழ்ச்சியில் இருந்த ஹர்பஜன் சிங் மற்றும் கீதா பஸ்ராவும் சிரித்தனர். அத்துடன் நிறுத்திக்கொள்ளாத ரித்திகா, “அவன் எப்போதுமே ஒரு கார்ட்டூன் மாதிரிதான்” என்றும் கூறினார்.