அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள கசப்புணர்வை பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்ளுமா?

Share

நரேந்திர மோதி, டொனால்ட் ரம்ப் மற்றும் ஷேபாஸ் ஷரீஃப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் இந்தியாவின் மீது 25% கட்டணத்தை விதித்துள்ளார், அதேநேரம் பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளார்

2019ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப்பை பற்றி பிரதமர் நரேந்திர மோதி, ‘அப்கி பார் டிரம்ப் சர்கார்’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அடுத்த வருடம் டிரம்ப் இந்தியாவுக்கு வந்தபோது, அவரை வரவேற்க நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி ஆமதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆய்வாளர்கள் இது இரு தலைவர்கள் இடையே உறவு வலுவடைவதன் அடையாளமாக பார்த்தனர். 2024ஆம் ஆண்டில் மோதி மீண்டும் ஆட்சிக்கு வந்தார், டிரம்பும் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

ஊடகங்கள் இந்திய – அமெரிக்கா இடையிலான உறவை மீண்டும் இந்த இருத்தலைவர்கள் இடையிலான உறவின் கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கின. ஆனால், இந்த இருத் தலைவர்கள் இடையிலான உறவு கடந்த ஆறு மாதங்களில் முன்பு இருந்தது போல் இல்லை என தோன்றுகிறது.

அதிபர் ஆன பிறகு டிரம்ப் பல நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என அறிவித்தார். மற்ற நாடுகளின் பொருட்கள் அமெரிக்கா சந்தைக்கு மலிவான விலையில் வருவதாகவும், பிற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிப்பதாகவும் டிரம்ப் சொல்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com