Yuzvendra Chahal; Dhanashree Verma; இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் தனது வாழ்க்கை முறிவு குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

Share

இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால், கடந்த 2020 டிசம்பரில், நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத் திருணம் செய்துகொண்டார்.

இருப்பினும், கடந்த பிப்ரவரியில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த சஹால் – தனஸ்ரீ, நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதம் பிரிந்தனர்.

இவ்வாறான சூழலில், சமீபத்திய பேட்டியொன்றில், விவாகரத்தான சமயத்தில் பலரும் தன்னைத் தவறாகப் பேசியதாகவும், சில சமயங்களில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று யோசித்ததாகவும் மிகவும் எமோஷனலாக சஹால் பேசியிருந்தார்.

யுவேந்திர சஹால் - தனஸ்ரீ வர்மா

யுவேந்திர சஹால் – தனஸ்ரீ வர்மா

இந்த நிலையில், அதே பேட்டியில் மேலும் பல விஷயங்களை சஹால் பகிர்ந்திருக்கிறார்.

தங்கள் இருவருக்குள் பிரிவு எப்போதிலிருந்து ஆரம்பித்தது என்பதை விவரித்த சஹால், “ரொம்ப நாளாகவே அவரை நான் பார்க்கவில்லை. பின்னர் வீடியோ காலில் அவரைப் பார்த்தேன்.

அதில் எங்களுடன் வழக்கறிஞர்கள் பேசினார்கள். அதன்பிறகு எங்கள் இருவருக்கிடையில் மெசேஜ் உட்பட எதுவுமே இல்லை.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com