பால், முட்டை, மீன், ஈரல், கேழ்வரகு, கொள்ளு, சோயா பீன்ஸ், உளுந்து, நண்டு, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃப்ளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் ஆகியவற்றின் மூலமாக கால்சியம் சத்து நமக்குக் கிடைக்கிறது.
சாப்பிட்ட உணவில் உள்ள கால்சியத்தை எலும்பு கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி சத்து தேவை. தினமும் அரை மணி நேரம் உடலில் வெயில் படுவதுபோல நின்றாலே வைட்டமின் டி சத்து கிடைக்கப்பெறலாம்.

எலும்புத் தேய்மானத்தை நமக்கு உணர்த்தும் அறிகுறிகள் மிகவும் குறைவே. உடற்பயிற்சி, கடின உழைப்பு இல்லாதவர்கள், மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்கள், கருப்பை நீக்கப்பட்ட பெண்கள் ஆகியோர் எலும்புத் தேய்மானத்துக்கு ஆளாக அதிக வாய்ப்புள்ளவர்கள் என்பதால் இவர்கள் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ளலாம்.