ட்நாக்பூரில் நடந்த கோர்ட் பார் அசோசியேஷன் நிகழ்வில் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய், தான் சட்டம் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது…
“கட்டடக் கலை கலைஞர் ஆக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், என் தந்தைக்கு வேறு கனவு இருந்தது.
அவருக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், அவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டதால், அவரால் வழக்கறிஞராக ஆக முடியவில்லை.

அதனால், அனைத்து பொறுப்புகளும் என் அம்மா, அத்தை மேல் விழுந்தது. எனது தந்தை அம்பேத்கரின் கொள்கைகளுக்கு அவரது வாழ்க்கையைக் கொடுத்துவிட்டார். என் வாழ்க்கையில் நான் எதாவது அர்த்தமுள்ளதாகச் செய்வேன் என்று என் தந்தை எப்போதும் நம்பினார்.
என்னுடைய பெயர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டப்போது. என் தந்தை என்னிடம் கூறியது…