ENG vs IND; Gill; Bumrah; joe root; டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான சாதனை டு ரூட்டின் யுனிக் சாதனை; இங்கிலாந்து vs இந்தியா போட்டியில் பதிவான சாதனைகள்.

Share

இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹெடிங்லி மைதானத்தில் ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.

முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் இந்தியா 471 ரன்கள் குவித்தது.

அதைத்தொடர்ந்து பவுலிங்கில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்திய போதிலும், ஒல்லி போப்பின் சதம் மற்றும் பென் டக்கெட், ஹாரி ப்ரூக்கின் அரைசதங்களால் இங்கிலாந்து 465 ரன்கள் குவித்தது.

ஆட்ட நாயகன் பென் டக்கெட்

ஆட்ட நாயகன் பென் டக்கெட்

அதையடுத்து, 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா, கே.எல். ராகுல் மற்றும் பண்ட்டின் சதங்களால் இங்கிலாந்துக்கு 371 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

அந்த இலக்கையும், கடைசி நாளில் மட்டும் பென் டக்கெட்டின் சதம் மற்றும் ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட்டின் அரைசதங்களால் 352 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 62 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 149 ரன்களும் அடித்த பென் டக்கெட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com