இரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது எப்படி? – அமெரிக்கா வழங்கிய விரிவான தகவல்கள்

Share

இரான், அமெரிக்கா தாக்குதல், அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்

18 மணிநேர பயணம், பலமுறை நடுவானிலேயே எரிபொருளை மீண்டும் நிரப்புதல், எதிரிகளை திசை திருப்புவதற்காக தந்திரமாக பயன்படுத்தப்படும் போலி ஆயுதங்கள் (decoys), இப்படித்தான் இரானின் அணுசக்திக் கட்டமைப்புகள் மீது குண்டுவீசும் அமெரிக்காவின் திட்டம் நிகழ்த்தப்பட்டது என்கிறார், அமெரிக்க ராணுவத்தின் மிக உயர்ந்த அதிகாரியான கூட்டுப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் டேன் கேய்ன்.

அமெரிக்காவால் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேம்மர்’ என அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் முழு விளைவு என்னவென்று இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில், இந்த சிக்கலான திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பது தாக்குதல் நிகழ்ந்த சில மணிநேரங்களிலேயே ஞாயிற்றுக்கிழமை காலை, அமெரிக்க பாதுகாப்பு துறை அலுவலகமான பென்டகனில் நடந்த ஊடக சந்திப்பில் விளக்கப்பட்டது.

வானிலிருந்து குண்டுகளை வீசும் அமெரிக்க விமானங்கள், “உலகம் அறியாத வண்ணம், இரானுக்குள் நுழைந்து (தாக்கிவிட்டு) திரும்பியதாக,” அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இரான், அமெரிக்கா தாக்குதல், அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்

இரானை திசைதிருப்பி தாக்குதல்

மிசௌரியின் கிராமப்புறத்தில் உள்ள அமெரிக்க வான் தளத்திலிருந்து பல விமானங்கள் புறப்பட்டதை வெள்ளை மாளிகையில் உள்ள கண்காணிப்பு அறையிலிருந்து (Situation Room) நள்ளிரவுக்கு சிறிது நேரத்துக்குப் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் உயர் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டதில் இருந்துதான் இவையனைத்தும் தொடங்கின. 05:01 BST நேரப்படி ஒயிட்மேன் வான்படை தளத்திலிருந்து இருள் சூழந்த நேரத்தில் பி-2 குண்டுவீச்சு விமானங்கள் புறப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com