சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரும் கௌரவம் அளிக்கும் வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு “ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டுள்ளது.
அதற்கான அறிமுக விழா லண்டனில் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் இங்கிலாந்து வேகப்பந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதற்கு முன் இந்த கோப்பை பட்டோடி டிராபி என அழைக்கப்பட்டது. இந்த நிலையில், பட்டோடியின் பெயரை நீக்குவது குறித்து பல்வேறு சர்ச்சைகளும் நீடித்து வந்தன. இந்திய அணிக்கு பட்டோடி குடும்பத்தின் இரண்டு பேர் கேப்டனாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.