சென்னை: லாரி மோதி பள்ளி மாணவி பலி – கனரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு

Share

சென்னை செய்திகள், செய்திகள், முக்கியச் செய்திகள், தலைப்புச் செய்திகள், சென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இன்று ஜூன் 20 தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள் மற்றும் இணைய செய்தித்தளங்களில் இடம் பெற்றுள்ள முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

தண்ணீர் லாரி மோதி பள்ளி சிறுமி உயிரிழந்ததன் எதிரொலியாக சென்னைக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார் என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“சென்னை கொளத்தூர், பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி சவுமியா, நேற்று முன்தினம் காலை தாயாருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், நேரக் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் அதிகளவில் சாலையை பயன்படுத்தும் பீக் ஹவர்ஸில் தண்ணீர் லாரியை அனுமதித்த குற்றச்சாட்டில் செம்பியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலை மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புளியந்தோப்பு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com