இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நாளை மறுநாள் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடுகிறது.
கோலி, ரோஹித் இல்லாத அணி, புதிய கேப்டன் மற்றும் புதிய துணைக் கேப்டன் கொண்ட அணி என்பதால் இந்த அணி மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எந்த மூன்று போட்டிகளில் பும்ரா களமிறங்குவார், அந்த மூன்று போட்டிகளில் பும்ராவுடன் சேர்ந்து பந்துவீசும் மற்ற இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் யார், பும்ரா விளையாடாத போட்டிகளில் வேகப்பந்துவீச்சு யூனிட்டை யார் முன்னெடுப்பது, முழுநேர சுழற்பந்துவீச்சாளராக அணியில் இடம்பெறப்போவது ஜடேஜாவா, குல்தீப் யாதவா, வாஷிங்டன் சுந்தரா எனப் பந்துவீச்சு யூனிட் மீது மட்டுமே அத்தனை கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கிறது.

ஏனெனில், டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கை விட பவுலிங் பலமாக இருப்பது அந்த அணியின் வெற்றிக்குச் சாதகமாக அமையும்.
அதேசமயம், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்தும் பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் இருக்கிறது.