கோவை ஹாஷ்பே: ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி நடந்தது எப்படி? நடிகைகள் மீது நடவடிக்கை சாத்தியமா?

Share

கிரிப்டோகரன்சி, மோசடி, புதுச்சேரி, தமிழ்நாடு

ரூ.100 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடியில் 5 மாநில காவல்துறையினரால் முக்கியப் புள்ளியாக செயல்பட்ட ஒருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் பணத்தை இழந்துள்ளனர்.

கோவையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இந்தியா முழுவதும் ரூ. 100 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டது எப்படி? அவர்களிடம் பணத்தை இழந்தவர்களால் அதனை திரும்பப் பெற முடியுமா? அந்த நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

ஹாஷ்பே மோசடி நடந்தது எப்படி?

கிரிப்டோகரன்சி, மோசடி, புதுச்சேரி, தமிழ்நாடு, போலி விளம்பரம், பிரபலங்கள், தண்டனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, hashpe.io இணையதள முகவரியை தற்போது விற்பனைக்கு உள்ளது

கோவையில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஹாஷ்பே என்கிற நிதி சேவை வழங்கும் நிறுவனம் தொடங்கப்பட்டது. ட்ரான் கனெக்ட் (Tron Connect) என்கிற திட்டத்தில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்று அவர்கள் விளம்பரம் செய்தனர். ஹாஷ்பே இணையதளம் மூலம் கிரிப்டோகரன்சி வாங்கவும், பணத்தை எளிதாகவும் வேகமாகவும் அனுப்ப முடியும் என்றும் அவர்களது விளம்பரங்களில் கூறப்பட்டிருந்தது.

50 டாலர் செலவு செய்து புக்கிங் செய்வதன் மூலம் 50 மில்லியன் டாலர் வரை லாபம் சம்பாதிக்க முடியும் என்றது அந்த விளம்பரம். அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிப்டோகரன்சி பற்றிய பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனத்தை பிரபலப்படுத்த சென்னையிலும் பின்னர் மும்பையில் சொகுசு கப்பலிலும் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com