மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரைக் கொண்டாடும் வகையில் ஜூலை 19ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள ‘ஆனந்த யாழை’ இசை நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ராம், நா.முத்துக்குமார் குறித்துப் பேசியிருக்கிறார்.

“முத்துக்குமார் என் வாழ்கையில் மட்டும் ஆனந்த யாழையை மீட்டவில்லை. தமிழ் திரையுலகில் மட்டும் மீட்ட வில்லை. தமிழ் பாடல்களைக் கேக்கக்கூடிய எல்லாருடைய வீட்டிலும் ஆனந்த யாழையை மீட்டிய, மீட்டிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு பாடலாசிரியர்.